நன்கு படித்த ஓர் இளைஞனுக்கும், ஓர் இளம்பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை இருந்தது. சின்னச் சின்ன உரசல்கள் வந்தாலும் அவர்கள் ஓரளவுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தார்கள். ஒருநாள் அவர்கள் டி.வி பார்த்துக்கொண்டு இருக்கும்போது போன் வந்தது. இளைஞன் போன் பேசிவிட்டு வந்தான். குழந்தை பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. ‘‘போன்ல யாரு?’’ என்று மனைவி கேட்டாள். ‘‘எங்க அக்கா’’ என கணவன் சொன்னான். ‘‘என்னவாம்?’’ ‘‘அவங்க நாளை மறுநாள் சென்னை வர்றாங்களாம். பையனுக்கு […]
அவர் போன மாதம்தான் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். தன் மனைவியை அழைத்துக் கொண்டு வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றிப் பார்க்கச் சென்றிருந்தார். இருவரும் விலங்குகளையும் பறவைகளையும் ரசித்துக் கொண்டிருந்தனர். அப்படி புலியையும் பார்க்க நின்றிருந்தார்கள். அங்கே நான்கு புலிகள் சிறு மைதான அமைப்பில் சுற்றித் திரிந்தன. திடீரென்று அவருக்கு போன் வரவே, அங்கிருந்து நகர்ந்து பேசச் சென்று விட்டார். பாதுகாப்புக் கம்பியைப் பிடித்துக் கொண்டு அவர் மனைவி மட்டும் நின்று கொண்டிருந்தார். அந்தப் பக்கம் புலிகள் கம்பி […]
ஆறாம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவனுக்கும் அவன் அம்மாவுக்கும் அன்று கடுமையான வாக்குவாதம் வந்தது. அப்பாவால் கூட இருவரையும் விலக்கி விட முடியவில்லை. நடந்தது இதுதான். அன்று அச்சிறுவனுக்கு விடுமுறை. ஆனால் அம்மாவுக்கும் அப்பாவுக்கு அலுவலகம் உண்டு. விடுமுறை நாள்தானே என்று காலை ஆறு மணிக்கு எழுந்து வீடியோ கேம் ஆடிக் கொண்டிருந்தான். ஆறு மணிக்கு எழுந்த அம்மாவும் அவனை பார்த்துக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவன் வீடியோ கேமை விட்டு எழுந்திருக்கவில்லை. அலுவலகம் […]
ஓர் இளவரசனுக்குத் திருமண வயது வந்தது. பல பெண்கள் அவனைத் திருமணம் செய்துகொள்ள போட்டி போட்டார்கள். அவனுக்கு ஏனோ யாரையும் பிடிக்கவில்லை. ஒரு பெண்ணின் மனதைப் புரிந்து கொண்டு அவளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசை கொண்டான். தன் குதிரையில் ஏறி தோன்றிய திசையில் அலைந்து திரியலானான். அப்படி ஒரு காட்டுக்குள் போனபோது அங்கே ஒரு குடியிருப்பு இருந்தது. அதில் சில பழங்குடி மக்கள் இருந்தார்கள். அவர்களிடம் உணவு வாங்கி அவன் சாபிட்டபோது, அவனைப் போலவே […]
வீட்டில் அனைவரும் அதை அவரிடம் எப்படிக் கேட்பது என்று யோசித்துக் கொண்டிருந்தனர். அவர்தான் குடும்பத்தலைவர். அவர்தான் அதிகம் சம்பாதிக்கிறார். அவர்தான் அதிகம் படித்தவர். அவர்தான் குடும்பத்தை அதிகம் நேசிப்பவர் என்று பல விஷயங்கள் குடும்பத்தினருக்குத் தெரிந்திருந்தாலும் நேற்று அவர் தியேட்டரில் நடந்து கொண்ட விதம் பலருக்கும் பிடிக்கவில்லை. அந்தக் குடும்பத்தில் ஏழு பேர். ஐம்பது வயதான குடும்பத் தலைவர் இவர். மனைவி. கல்லூரி படிக்கும் மூன்று பிள்ளைகள். வயதான அம்மா அப்பா. அனைவரும் ஜுராசிக் பார்க் திரைப்படம் […]
புதிதாய் திருமணம் ஆன விவசாயி ஒருவன், தன் மனைவியை வேண்டுமென்றே அவமானப்படுத்தியபடி இருந்தான். அவள் சீதனமாக ஒரு பசு மாடு கொண்டு வந்திருந்தாள். அது தினமும் நிறைய பால் கொடுத்து வந்தது. மிக சுவையான, சத்தான பாலாக அது இருந்தது. ஒருநாள் அவள் பால் கறந்து கொண்டிருந்தபோது இவன் அவளிடம் சண்டை இழுத்து எட்டி உதைத்தான். அவள் பால் சொம்பு கவிழ்ந்து கொட்ட தரையில் விழுந்தாள். பசு மாடு இதைப் பார்த்துக் கொண்டே இருந்தது. மனைவி அழுது […]
வனத்துறை அதிகாரி ஒருவர் தன் குடும்பத்துடன் காட்டின் அருகே இருக்கும் அரசு இல்லத்தில் வசித்து வந்தார். அவர் தினமும் காலையில் வீட்டின் முன் வராண்டாவில் நின்று, பறவைகளுக்கு தானியம் போடுவார். இது என்ன வகை என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு விதவிதமான பறவைகள் வந்து தானியங்களைக் கொத்தித் தின்னும். இதை அவரும் குடும்பத்தினரும் ரசிப்பார்கள். இதில் முக்கிய கட்டமாக, தானியத்தைத் தன் உள்ளங்கையில் வைத்து கையை நீட்டியபடி அவர் காத்திருப்பார். சில பறவைகள் பயப்படாமல் அழகாக அவர் […]
புகழ்பெற்ற அந்தப் பள்ளிக்கூட வாசலில் கல்லூரி மாணவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். பள்ளி முடிந்த மணி அடித்ததால் மாணவர்கள் பேசிச் சிரித்தபடியே வெளியே வந்தார்கள். அப்படித்தான் பிளஸ் 2 படிக்கும் அந்த மாணவியும் வெளியே வந்தாள். அவள் வந்ததும், கல்லூரி மாணவர்கள் சுறுசுறுப்பானார்கள். ஏனென்றால் அப்பள்ளியிலும் சரி, அந்த பகுதியிலும் சரி, அவளையே மிக அழகான பெண்ணாக அவர்கள் நினைத்தார்கள். எப்படியாவது அவளை ஈர்த்து தன்னைக் காதலிக்க வைக்க வேண்டும் என்று பெரும் கூட்டமே காத்திருந்தது. ஒவ்வொரு நாளும் […]
பள்ளி முடிந்ததும் அப்பாவைப் பார்க்க, அவர் வேலை பார்க்கும் இடத்துக்கு அந்த சிறுமி சென்றாள். அவள் அப்பா ஓர் உணவகத்தில் சர்வர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இரண்டு நாள் கழித்து அவளுக்குப் பிறந்த நாள் வருவதால், பள்ளி முடிந்ததும் நேரடியாக தான் வேலை பார்க்கும் இடத்துக்கு வரச் சொல்லியிருந்தார் அப்பா. அதன்படி வந்து அப்பாவுக்காகக் காத்திருந்தாள் மகள். அப்பா சுறுசுறுப்பாக உணவைப் பரிமாறிக் கொண்டிருந்தார். சில வாடிக்கையாளர்கள் இன்முகத்துடனும், சிலர் எரிச்சலுடனும் அப்பாவை நடத்தினார்கள். சிலர் மெலிதாக […]
தன் அப்பாவுடன் கன்னியாகுமரி கடற்கரையோர கடைத் தெருக்களில் உற்சாகமாய் நடை போட்டுக் கொண்டிருந்தான் அந்தச் சிறுவன்.‘‘அப்பா… பாருங்கப்பா! சிப்பிகள்ல செய்திருக்கிற மயில், கிளி எல்லாமே அழகாயிருக்குப்பா!’’ ‘‘ஆமாம்பா!’’ ‘‘இந்தக் கடற்கரை காற்று, கன்னியாகுமரி எல்லாமே பிடிச்சிருக்குப்பா எனக்கு!’’ ‘‘எனக்கும் பிடிச்சிருக்குப்பா…’’அப்பா சிரித்தார். ‘‘அப்பா, ஏதாவது கதை சொல்லுங்க!’’ அப்பா ஆரம்பித்தார். ‘‘அது ஒரு சின்ன கதைதான். அப்ப நாங்க பள்ளிக்கூடம் படிச்சிட்டு இருந்தோம். அப்பாவுக்கு முன் பல்லு விழுந்து முளைச்சி வளர்ந்திருந்தது.’’ ‘‘அப்புறம்?’’ ‘‘அப்போ நாங்க எல்லாம் […]