தினம் ஒரு கதை - 104

‘‘அப்பா, நான் அயர்ன் பண்ணிக் கொடுக்கிறேன்’’ என்றான் மகன். அப்பாவும் மகனிடம் அயர்ன் பாக்ஸைக் கொடுத்துவிட்டு அருகில் இருந்த போஸ்ட் ஆபீஸுக்கு போய்விட்டார். அவர் கடந்த ஐந்து வருடங்களாக 80 வீடுகள் இருக்கும் அந்த அபார்ட்மென்டில் வண்டி போட்டு அயர்ன் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் மகன் கல்லூரி படிக்கிறான். விடுமுறை தினங்களில் அப்பாவுக்கு உதவி செய்வான். போஸ்ட் ஆபீஸ் போய்விட்டு அப்பா திரும்பியபோது மகன் வேலையை முடித்திருந்தான். ‘‘நானே துணியைக் கொண்டு போய் கொடுத்துட்டேன்பா’’ என்றான். […]

Read More
தினம் ஒரு கதை - 103

தியேட்டரில் பகல் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. வெளியே சுட்டெரிக்கும் வெயில் காரணமாக உள்ளே ஏ.சியை அதிகமாக வைத்திருந்தனர். அது ஜில்லென்ற குளிரைக் கொடுத்து, படம் பார்க்க வந்தவர்களை உற்சாகப்படுத்தியது. பகல் நேரமாதலால் குடும்பத்தோடு வருபவர்களை விட தனித் தனியான ஆண்கள் கூட்டம் அதிகமாய் இருந்தது. அவர்கள் ஏ.சியை அனுபவித்தபடியே படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.இடைவேளை வந்தது. பாப்கார்ன், காபி குடித்து விட்டு வந்தார்கள். படம் மீண்டும் ஆரம்பமானது. ஏ.சியை அணைத்து வைத்திருக்கிறார்கள் என்பது ஐந்து நிமிடங்களுக்குப் பிறகே தெரிந்தது. அவர்கள் […]

Read More
தினம் ஒரு கதை - 102

காலையில் கண்விழித்த அந்த 10 வயது குட்டிப்பெண்ணுக்கு மனம் நிறைந்த சந்தோஷம். அவள் கண்முன்னே அழகான பொம்மை ஒன்று இருந்தது. அது ஒரு ‘ஹம்டி டம்டி’ பொம்மை. முட்டை மாதிரி தலை பெரிதாக இருந்தது. அழகான மஞ்சள் நிறத்தில் இருந்தது. இரண்டு கைகள், கால்கள் என்று நீளமாக கார்ட்டூன் சித்திரம் போலான பொம்மை அது. படுக்கையில் படுத்தபடியே அதை உருட்டி உருட்டிப் பார்த்தாள். அங்கே வந்த அப்பா, ‘‘ஹலோ மேடம். என்ன பொம்மையை பாத்துட்டே இருக்கீங்க?’’ என்றார். […]

Read More
தினம் ஒரு கதை - 101

பணக்காரர் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தார். வெயில் அதிகமான அந்த மதிய வேளையில் கார் ரிப்பேர் ஆகி வழியிலேயே நின்றது. கார் மெக்கானிக்கிற்கு போன் செய்தார். ‘‘வர ஒரு மணி நேரம் ஆகும்’’ என்றார் அவர். அந்த இடத்தில் ஆட்டோவும் கிடைக்கவில்லை. வேறு காரில் லிஃப்ட் கேட்கவும் வெட்கம். புதிதாய் ஒரு கார் வாடகைக்கு அமர்த்தினாலும், வர முக்கால் மணி நேரமாவது ஆகக்கூடிய ஒதுக்குப்புறமான இடம் அது. ‘வேறு வழியில்லை. மெக்கானிக் வந்து ரிப்பேர் செய்யும்வரை காத்திருப்போம்’ […]

Read More
தினம் ஒரு கதை - 100

பழுப்பு நிற முயலும் கறுப்பு நிற முயலும் மான் வைத்த விருந்துக்கு சென்று கொண்டிருந்தன. இதில் பழுப்பு முயல் தந்திரசாலி. கறுப்பு முயல் அப்பாவி. பல கதைகள் பேசி இரு முயல்களும் சென்றபோது, கறுப்பு முயலுக்கு அங்கொரு செடியைக் காட்டியது பழுப்பு முயல். ‘‘அதோ பார். அது ஒரு மூலிகைச் செடி. எப்பேர்ப்பட்ட வயிற்று வலி என்றாலும் அதை சாப்பிட்டால் சரியாகிவிடும். நாம் மான் அண்ணா வீட்டில் நல்ல விருந்து சாப்பிட்டு அதனால் வயிற்று வலி ஏற்பட்டால் […]

Read More
தினம் ஒரு கதை - 99

கோடை விடுமுறையைக் கொண்டாட அந்த சிறுமி தன் நண்பர்களுடன் கடற்கரைக்குச் செல்லத் திட்டமிட்டாள். பேருந்தில் சென்று இறங்கிய அந்த சிறார் கூட்டம், கடற்கரையை அடைவதற்காக சாலையில் நடந்து கொண்டிருந்தனர். அப்போது சர்ரென்று மூன்று பைக்குகள் மிக வேகமாக அவர்களைக் கடந்து சென்றன. அவை ரேஸ் பைக். அந்த சாலையில் சென்ற மொத்த மக்களையும் அச்சுறுத்துவது போல பைக்கை ஓட்டிச் சென்றார்கள். கடற்கரை சாலையில் இங்கும் அங்கும் வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தார்கள். போலீஸ்காரர் ஒருவர் அவர்களை விசாரித்தார். ஆனால், […]

Read More
தினம் ஒரு கதை - 98

ஒரு தீவின் கரையில் காலை வேளையில் ஓர் அழகான பெண் கிளிஞ்சல்கள் சேகரித்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்கே ஓர் இளைஞன் மயங்கிக் கிடப்பதை பார்த்தாள். அவனைக் காப்பாற்றி கரைக்கு இழுத்து வந்து, குடிக்க நீரும் உண்ண உணவும் கொடுத்தாள். அங்கேயே ஒரு குடிசை கட்டி அவனைத் தங்க வைத்து, தினமும் அவள் வீட்டிலிருந்து உணவு கொடுத்து உபசரித்தாள். நாளடைவில் இருவரும் காதலித்தார்கள். அவளுடைய பெற்றோர் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். பெண்கள் திருமணம் செய்துகொண்டு அந்த தீவைப் […]

Read More
தினம் ஒரு கதை - 97

தொழிலதிபர் ஒருவர் கடற்கரையில், கடல் அலைகள் தன் கால்களில் பட நடந்து கொண்டிருந்தார். அவர் மனம் குழம்பிப் போய் இருந்தது. அவர் நடத்தி வரும் கூரியர் சர்வீஸ் நிறுவனத்தில் ஏதோ ஒன்று சரியாக இல்லை என்று அவருக்கு தெரிகிறது. ஆனால் அது எது என்று தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக நன்றாக செயல்பட்ட நிறுவனம் திடீரென்று தேக்கநிலை அடைந்துள்ளது என்று மட்டும் அவரால் உணரமுடிகிறது. என்ன பிரச்னை என்று துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நினைப்புடன் அவர் நடந்து கொண்டிருந்தபோது […]

Read More
தினம் ஒரு கதை - 96

விடுமுறை தினத்தில் மூன்று கல்லூரி மாணவிகள் சினிமா பார்க்கத் திட்டமிட்டார்கள். ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யலாம் என்றால், அந்த இணையதளம் சரியாக வேலை செய்யவில்லை. ‘சரி, நேரில் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம்’ என்று தியேட்டருக்குப் போகிறார்கள். அங்கே காலைக் காட்சிக்கு டிக்கெட் இல்லை. மதியம் மூன்று மணிக் காட்சிக்குத்தான் இருக்கிறது. ‘‘அதுவரைக்கும் நாம என்ன செய்யறது? பேசாம திரும்பிப் போயிடலாம்’’ என்று இருவர் சொல்ல, ஒரு பெண் மட்டும் மூன்று மணிக் காட்சிக்கே மூவருக்கும் டிக்கெட் எடுத்தாள். […]

Read More
தினம் ஒரு கதை - 95

நாலாயிரம் ரூபாய் கொடுத்து அந்த மூக்குக் கண்ணாடியை வாங்கி இருந்தார் அவர். அவருடைய வருமானத்துக்கு இது அதிகம் என்றாலும், தரமாக வாங்க வேண்டும் என்ற ஆசையால் அப்படி வாங்கிவிட்டார். அதைப் பெருமையுடன் அணிந்து கொண்டார். ஒருநாள் காலை எழுந்து முகம் கழுவிவிட்டு கண்ணாடி அணியும்போதுதான், கண்ணாடியின் ஃபிரேம் ஓரத்தில் மிகச் சிறியதாக கீறல் இருப்பதைக் கவனித்தார். சட்டென்று கண்ணுக்கு தெரியவில்லை என்றாலும் அது கீறல்தான். வாங்கும்போதே அது இருந்திருக்கிறது. கடைக்காரர் தன்னை ஏமாற்றிவிட்டதாக மனைவியிடம் புலம்பினார். ‘‘போய் […]

Read More
crossmenu