ஓர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அந்த இளைஞன், தன்னுடன் வேலை பார்க்கும் இளம்பெண் ஒருவரைக் காதலித்தான். முதலில் தயங்கியவன் பிறகு தைரியத்தை வளர்த்துக் கொண்டு தன் காதலைச் சொல்லிவிட்டான். அவள் அந்தக் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. அதே சமயம் அவன் காதலைச் சொன்னதைக் குற்றமாகவும் கருதவில்லை. ‘‘நீங்கள் காதலிப்பது உங்கள் உணர்வு. ஆனால் எனக்கு உங்களைப் பற்றி அதிகம் தெரியாது. எனக்கு உங்கள் மேல் எந்தக் காதல் உணர்வும் இல்லை’’ என்று தெளிவாகச் சொல்லிவிட்டாள். இதைக் கேட்டு […]
உயர்கல்வி படிப்பதற்காக சிறு நகரம் ஒன்றிலிருந்து சென்னை வந்தார் அந்த இளம்பெண். ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் அறை எடுத்து தங்கிக் கொண்டார். தினமும் காலையில் எழுந்து ஹாஸ்டலில் கொடுக்கும் உணவை உண்டு விட்டு கல்லூரி செல்ல ஆரம்பித்தார். அங்கே பல ஆண், பெண் நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள் மிக கண்ணியமாக பழகினார்கள். இவரும் கண்ணியமாகப் பழகினார். இரண்டு மாதங்கள் வாழ்க்கை சிறப்பாக சென்றது. அதன்பிறகு இரவுகளில் தனிமையும் வெறுமையும் வாட்ட ஆரம்பித்தது. இரவு எட்டரை மணிக்கு சாப்பிட்டு […]
ஒரு நிறுவனத்தில் ஐந்து இளைஞர்கள் வேலைக்குச் சேர்ந்திருந்தார்கள். அதில் ஓர் இளைஞன் மட்டும் வேலையில் ஆர்வமில்லாமல் இருந்தான். அவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் மேலதிகாரி அவனுக்கு ஊக்கமான வார்த்தைகள் பலவற்றைச் சொன்னார். வேலையை எளிமையாகப் புரியும்படி கற்றுக் கொடுத்தார். ஆனாலும் அவன் பெரிய ஆர்வம் காட்டவில்லை. உற்சாகம் இல்லாமலேயே இருந்தான். ஒருநாள் திடீரென்று ராஜினாமா கடிதம் கொடுத்தான். இவர் காரணத்தை மேலோட்டமாகக் கேட்டுவிட்டு, சட்டென்று ராஜினாவை ஏற்றுக் கொண்டார். ராஜினாமா கடித்தத்தில் இவர் அப்ரூவல் கையெழுத்தை இட்டு மேற்படி […]
ஒரு தெருவில் 36 வயது ஆணும் 34 வயது பெண்ணும் தனித்தனியே வாழ்ந்து வந்தார்கள். இருவருக்கும் ஒருவரை ஒருவர் தெரியாது. இருவருமே காதல் தோல்வி அடைந்தவர்கள். அதனாலேயே திருமணம் செய்யாமல் இருந்தார்கள். மனிதர்களின் அன்பு மீது நம்பிக்கை இழந்தவர்கள். ஆண் தன் வெறுமையிலிருந்து மீள ஒரு பொமேரியன் நாய் வளர்த்தான். பெண் தன் வெறுமையில் இருந்து மீள நிறைய புத்தகமாய் படித்து வந்தாள். ஒரே தெருவில் இருந்த காரணத்தால், இருவரும் அடிக்கடி பார்த்துக் கொள்வார்கள்தான். ஆனால் ஒருவர் […]
கழுகு ஒன்று மேகத்துக்கு மேலே பறந்து கொண்டிருந்தது. எல்லா மேகங்களும் காற்றின் வேகத்துக்கு ஏற்றபடி நகர்ந்து கொண்டிருக்க, ஒரே ஒரு திரள் மேகம் மட்டும் நகராமல் பிடிவாதமாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது. கழுகு அந்த மேகத்துக்கு அருகே வந்து, ‘‘ஏன் நீ மட்டும் நகராமல் கஷ்டப்பட்டு காற்றை எதிர்த்து இங்கேயே நின்று கொண்டிருக்கிறாய்?’’ என்று கேட்டது. ‘‘ஓர் உயிருக்கு ஆபத்து. அதனால் கலங்கிப் போய், அதைக் காப்பாற்ற இங்கேயே நிற்கிறேன்’’ என்றது. ‘‘யாருக்கு ஆபத்து? என்னிடம் […]
அலெக்சாண்டர் உலகையே வெற்றி கொண்டு, இந்தியாவின் வட பகுதியையும் வெற்றி கொண்ட கர்வத்தில் குதிரையில் வந்து கொண்டிருக்கிறார். அவர் மனம் பெருமையால் நிறைந்து இருக்கிறது. குதிரையில் தனியாக அமர்ந்து சவாரி செய்தபடி தன்னைத்தானே மனதுக்குள் மெச்சிக் கொண்டு போவது அலெக்சாண்டருக்குப் பிடித்த பொழுதுபோக்கு. 16 வயதில் தன் தந்தை மன்னர் பிலிப் அவரை ராணுவத்தில் சேர்த்துக் கொண்டது, 17 வயதில் தீபனியர்களை வியூகம் அமைத்து வெற்றி கொண்டு அவர்கள் நகரத்துக்குள் பீடுநடை போட்டுச் சென்றது என எல்லாவற்றையும் […]
ஒரு நகரத்தில் இருந்த இளைஞனும் ஓர் இளம்பெண்ணும் காதலித்தார்கள். அந்த நகரத்தின் வெளியே ஓர் ஏரி இருந்தது. அங்கே படகு சவாரி பொழுதுபோக்கும் இருந்தது. ஒருநாள் படகு சவாரிக்குப் போகலாம் என்று அவர்கள் திட்டமிட்டனர். அவன் தன் நண்பனின் பைக்கைக் கேட்டு வாங்கி வந்தான். பெண்ணும் ஏதோ காரணத்தை வீட்டில் சொல்லிவிட்டு வந்தாள். இருவரும் பொது இடத்தில் சந்தித்துக் கொண்டார்கள். அவள் பைக்கின் பின்னால் அமர்ந்து கொண்டாள். அவன் பைக்கை ஓட்டினான். நகரத்துக்குள் சாதாரணமாக ஓட்டியவன், நகரத்தைத் […]
மகளின் கைகளில் லேசான சூட்டுத் தழும்பைப் பார்த்த அப்பா பதறிவிட்டார்.‘‘என்னம்மா இது?’’‘‘அது ஒண்ணுமில்லப்பா. அடுப்புல லேசா கை பட்டுடுச்சி.’’ ‘‘நீ சமைச்சியா? ஏன், அதைத்தான் அம்மா பாத்துப்பாங்களே!’’‘‘ஆமாப்பா, நான் தோசை சுட்டேன்பா!’’‘‘நீ ஏன் அதையெல்லாம் செய்யறே?’’ ‘‘நான் செய்யலேன்னா அம்மாவுக்கு யாரு தோசை சுட்டுக் கொடுப்பாங்க?’’ ‘‘அதை அவங்களே சுட்டு சாப்பிட்டுக்கலாம்தானே!’’‘‘அப்பா, நீங்க சின்ன வயசுல இருக்கும்போது உங்களுக்கு யார் தோசை சுட்டுத் தருவாங்க?’’‘‘உன் பாட்டிதான் சுட்டுத் தருவாங்க!’’ ‘‘நல்லா சாப்பிடுவீங்களா?’’‘‘நல்லா சாப்பிடுவேன்மா!’’‘‘நீங்க சாப்பிட்டுட்டு பாட்டிக்கு பதிலுக்கு […]
அமைதியை விரும்பும் நாட்டின் மீது கொடுங்கோல் மன்னன் ஒருவன் படை எடுத்து வந்தான். அவனிடம் முரட்டு காளைப் படை ஒன்று இருந்தது. அதிலுள்ள காளைகள் எல்லாம் வீரமிக்கவை, முரடானவை. நாட்டுக்குள் புகுந்து மோசமாக நாசம் செய்பவை. அமைதி விரும்பும் நாட்டின் அரசனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கொடுங்கோலன் நாட்டிற்குள் வந்தால் தன் குடிமக்கள் அனைவரையும் சிதைத்து விடுவான் என்று அஞ்சினான். கொடுங்கோலனை நேருக்கு நேராக போரில் சந்திக்கும் படை பலம் அவனிடம் இல்லை. என்ன செய்வதென்று யோசித்தான். […]
‘கொக்கி குமாரி’ என்று அந்த ஐந்தாம் வகுப்பு மாணவியை வகுப்பில் அனைவரும் கிண்டல் செய்தார்கள். பெண்கள் மட்டுமே படிக்கும் அப்பள்ளியில் யாருக்காவது உடையின் கொக்கி எனப்படும் ஹூக் கழன்றிருந்தால், இவள் ஆர்வமுடன் அதைச் சரி செய்வாள். தானே முன்வந்து, ‘‘ஏய், உனக்குப் பின்னாடி சரியா மாட்டவில்லை பாரு’’ என்று சரி செய்வாள். பல மாணவிகள் இவளுடைய இந்த ஆர்வத்தால் பயனடைந்திருக்கிறார்கள். இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் கொடுப்பது பள்ளிச் சிறார்களின் வழக்கம்தானே. அதன் அடிப்படையில் இவளை அனைவரும் […]