புதிதாய் திருமணம் ஆன விவசாயி ஒருவன், தன் மனைவியை வேண்டுமென்றே அவமானப்படுத்தியபடி இருந்தான். அவள் சீதனமாக ஒரு பசு மாடு கொண்டு வந்திருந்தாள். அது தினமும் நிறைய பால் கொடுத்து வந்தது. மிக சுவையான, சத்தான பாலாக அது இருந்தது. ஒருநாள் அவள் பால் கறந்து கொண்டிருந்தபோது இவன் அவளிடம் சண்டை இழுத்து எட்டி உதைத்தான். அவள் பால் சொம்பு கவிழ்ந்து கொட்ட தரையில் விழுந்தாள். பசு மாடு இதைப் பார்த்துக் கொண்டே இருந்தது. மனைவி அழுது […]
வனத்துறை அதிகாரி ஒருவர் தன் குடும்பத்துடன் காட்டின் அருகே இருக்கும் அரசு இல்லத்தில் வசித்து வந்தார். அவர் தினமும் காலையில் வீட்டின் முன் வராண்டாவில் நின்று, பறவைகளுக்கு தானியம் போடுவார். இது என்ன வகை என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு விதவிதமான பறவைகள் வந்து தானியங்களைக் கொத்தித் தின்னும். இதை அவரும் குடும்பத்தினரும் ரசிப்பார்கள். இதில் முக்கிய கட்டமாக, தானியத்தைத் தன் உள்ளங்கையில் வைத்து கையை நீட்டியபடி அவர் காத்திருப்பார். சில பறவைகள் பயப்படாமல் அழகாக அவர் […]
புகழ்பெற்ற அந்தப் பள்ளிக்கூட வாசலில் கல்லூரி மாணவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். பள்ளி முடிந்த மணி அடித்ததால் மாணவர்கள் பேசிச் சிரித்தபடியே வெளியே வந்தார்கள். அப்படித்தான் பிளஸ் 2 படிக்கும் அந்த மாணவியும் வெளியே வந்தாள். அவள் வந்ததும், கல்லூரி மாணவர்கள் சுறுசுறுப்பானார்கள். ஏனென்றால் அப்பள்ளியிலும் சரி, அந்த பகுதியிலும் சரி, அவளையே மிக அழகான பெண்ணாக அவர்கள் நினைத்தார்கள். எப்படியாவது அவளை ஈர்த்து தன்னைக் காதலிக்க வைக்க வேண்டும் என்று பெரும் கூட்டமே காத்திருந்தது. ஒவ்வொரு நாளும் […]
பள்ளி முடிந்ததும் அப்பாவைப் பார்க்க, அவர் வேலை பார்க்கும் இடத்துக்கு அந்த சிறுமி சென்றாள். அவள் அப்பா ஓர் உணவகத்தில் சர்வர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இரண்டு நாள் கழித்து அவளுக்குப் பிறந்த நாள் வருவதால், பள்ளி முடிந்ததும் நேரடியாக தான் வேலை பார்க்கும் இடத்துக்கு வரச் சொல்லியிருந்தார் அப்பா. அதன்படி வந்து அப்பாவுக்காகக் காத்திருந்தாள் மகள். அப்பா சுறுசுறுப்பாக உணவைப் பரிமாறிக் கொண்டிருந்தார். சில வாடிக்கையாளர்கள் இன்முகத்துடனும், சிலர் எரிச்சலுடனும் அப்பாவை நடத்தினார்கள். சிலர் மெலிதாக […]
தன் அப்பாவுடன் கன்னியாகுமரி கடற்கரையோர கடைத் தெருக்களில் உற்சாகமாய் நடை போட்டுக் கொண்டிருந்தான் அந்தச் சிறுவன்.‘‘அப்பா… பாருங்கப்பா! சிப்பிகள்ல செய்திருக்கிற மயில், கிளி எல்லாமே அழகாயிருக்குப்பா!’’ ‘‘ஆமாம்பா!’’ ‘‘இந்தக் கடற்கரை காற்று, கன்னியாகுமரி எல்லாமே பிடிச்சிருக்குப்பா எனக்கு!’’ ‘‘எனக்கும் பிடிச்சிருக்குப்பா…’’அப்பா சிரித்தார். ‘‘அப்பா, ஏதாவது கதை சொல்லுங்க!’’ அப்பா ஆரம்பித்தார். ‘‘அது ஒரு சின்ன கதைதான். அப்ப நாங்க பள்ளிக்கூடம் படிச்சிட்டு இருந்தோம். அப்பாவுக்கு முன் பல்லு விழுந்து முளைச்சி வளர்ந்திருந்தது.’’ ‘‘அப்புறம்?’’ ‘‘அப்போ நாங்க எல்லாம் […]
கல்லூரிப் படிப்பை முடித்த மகன் 40 ஆயிரம் ரூபாய் கட்டணம் உள்ள கம்ப்யூட்டர் படிப்பு கற்றுக்கொள்ள வேண்டும் என்று தன் பெற்றோர்களிடம் கேட்டான். அவர்களும் மிக மிக கஷ்டப்பட்டு பணத்தைப் புரட்டி அவனை கம்யூட்டர் வகுப்பில் சேர்த்து விட்டார்கள். முதலில் ஆர்வமாக வகுப்புக்குச் சென்ற மகன், திடீரென்று சோர்வானான். வீட்டில் அனைவரிடமும் எரிந்து விழுந்தான். கம்யூட்டர் பாடங்களை வீட்டில் சரியாக பயிற்சி எடுக்கவில்லை. வீட்டுப் பாடம் செய்யாமல் தவிர்த்தான். வகுப்புகளைப் புறக்கணிக்க ஆரம்பித்தான். அப்பாவும் அம்மாவும் தவித்துப் […]
‘‘அம்மா! நான், பாப்பா, உங்க மருமக மூணு பேரும் ஷாப்பிங் மால் போறோம். நீங்க வீட்டை பார்த்துப்பீங்கதானே?’’ ‘‘சரிப்பா! நான் எங்கே அங்க எல்லாம் வரமுடியும்? வயசாயிடுச்சு இல்ல. கால் வலி வேற படுத்தி எடுக்குது. எனக்கு மாலுக்கு வர்றதுக்குப் பிடிக்காது. நீங்க எல்லாம் போயிட்டு வாங்க!’’ ‘‘ஏன் பிடிக்காது? பாட்டியும் ஷாப்பிங் மாலுக்கு வரணும்’’ என பேத்தி அடம் பிடித்தாள். ‘‘பாட்டியால அங்க எல்லாம் ஏறி இறங்க முடியாதும்மா. எஸ்கலேட்டர்ல ஏறத் தெரியாது அவங்களுக்கு! அது […]
திருமண வயது வந்த மகனுக்காக வரன் பார்த்து வைத்திருந்தார் அம்மா. மகன் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. தான் சுதந்திரமாக, இலக்கற்று, நிம்மதியாக வாழ நினைப்பதாக பெற்றோரிடம் சொன்னான். ‘என்ன சொன்னாலும் மகனுக்குப் புரிய வைக்க முடியவில்லையே’ என பெற்றோர் அவனை அவன் போக்கிலேயே விட்டுவிட்டார்கள். ஒரு விடுமுறை தினத்தில் நண்பர்களுடன் காட்டுக்குச் சென்றபோது ஒரு காட்டுப்பன்றி அவனைத் துரத்த, பெரிய மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டான். இருட்டிவிட்டது. இரவில் இறங்கி மீண்டும் அதனிடம் மாட்டிக்கொள்வதைவிட காலையில் இறங்குவதுதான் புத்திசாலித்தனம் […]
அலுவலகத்தில் வேலை பார்க்கும் மகள், நள்ளிரவு தூங்காமல் சோபாவில் அமர்ந்திருப்பதை அப்பா கவனித்தார். அருகில் வந்து, ‘‘ஏன் தூங்கவில்லை?’’ என்றார். ‘‘மனசு சரியில்லை’’ என்றாள் மகள். ‘‘உனக்கு அன்பான குடும்பம் இருக்கும்போது மனசு ஏன் சரியில்லை?’’ என்றார் அப்பா. ‘‘இது அலுவலகத்தில் நடந்த விஷயம்’’ என்றாள் மகள். ‘‘என்னவென்று சொல்… நானும் தெரிந்துகொள்கிறேன்’’ என்றார் அப்பா. மகள் சொல்ல ஆரம்பித்தாள்… ‘‘என் அலுவலகத்தை கூட்டிப் பெருக்கி துடைத்து சுத்தம் செய்யும் பெண் ஒருத்திக்கு இப்போதுதான் கல்யாணம் ஆகி […]