பிரார்த்தனை, பக்தி, நம்பிக்கை, மனசாட்சி பற்றி மகாத்மா காந்தி சொன்னசில பொன்மொழிகள் இங்கே: பிரார்த்தனை அல்லது இறை வணக்கம் என்பது, வீட்டில் உள்ளபாட்டியின் பொழுதுபோக்கல்ல. சரியாகச் செய்தால் மிகச் சிறந்தஆயுதம் அது. ஒருவனுக்கு எந்த அளவுக்கு உள்ளொளி இருக்கிறதோ அந்தஅளவுக்குத்தான் பிரார்த்தனை அவனிடம் இருக்கும். எவனொருவன் தினமும் இறை வணக்கத்தில் ஈடுபடுகிறானோ அவன்தினம் தினம் புதியதைச் சேர்க்கிறான். அந்தப் புதிய விஷயங்களைஎதனுடனும் ஒப்பிட முடியாது. மனதை மகிழ்ச்சியடையச் செய்யும் ஒரு செயல் எதுவாக இருக்கும்என்றால், அது தலைவணங்கிச் […]
இந்தியாவின் விவாகரத்து தலைநகரமாக இருக்கிறது தமிழகம். தேசத்திலேயே விவாகரத்தானவர்கள்/ துணையை இழந்தவர்கள் அதிகம் வாழும் மாநிலம் தமிழகம்தான். இங்கு பலருக்கு திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை; திருமணத்துக்குப் பிறகு புகுந்த வீட்டில் சொர்க்கமும் நிச்சயமில்லை. ஆனால் குடும்ப நீதிமன்றத்தில் காத்திருப்பது விதியாகி விடுகிறது. அமெரிக்க வாழ்க்கைமுறை பழகிப் போய்விட்ட நமக்கு, அங்கிருக்கும் விவாகரத்து விகிதங்களும் பழகிவிடும் போலிருக்கிறது. அங்கு நடக்கும் திருமணங்களில் பாதி விவாகரத்தில் முடிகின்றன. ‘மனைவி குறட்டை விடுகிறார்’, ‘அவள் பூனை வளர்க்கிறாள். அது எனக்கு பிடிக்கவில்லை’, […]
உடல் ஆரோக்கியமாக இருக்க, உணவில் எல்லா சத்துகளும் சரிவிகிதத்தில் இருக்க வேண்டும். புரதச்சத்து, நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்பு என எல்லாமே அளவான விகிதத்தில் இருப்பது அவசியம். நமது சேமிப்பும் முதலீடும் இப்படி சரிவிகிதத்தில் இருந்தால்தான், பண விஷயத்தில் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். பாதுகாப்பு, வளர்ச்சி, அவசரத்துக்குக் கைகொடுப்பது என்று பல அம்சங்கள் கொண்டதாக இந்த டயட் இருக்க வேண்டும். * புரோட்டீன்: தசைகளைக் கட்டமைத்து உடலை நன்கு வளர்ச்சி பெறச் செய்கிறது புரோட்டீன். இளமையாக இருக்கும்போது, […]
பெரும்பாலான பெண்கள் கையில் ஹேண்ட்பேக் எடுக்காமல் வாசலைத் தாண்டுவதில்லை. உங்கள் ஹேண்ட்பேக்கில் என்ன இருக்கிறது? செல்போன், குட்டி பர்ஸ், கர்ச்சீப், ஃபேஷியல் க்ரீம், மஸ்காரா, லிப்ஸ்டிக், ஸ்டிக்கர் பொட்டு, ஐ லைனர், மேக்கப் பெட்டி என ஏகப்பட்ட அயிட்டங்கள் அதில் அடைந்து கிடக்கும். இதையெல்லாம் தாண்டி இன்னொரு ஆபத்தையும் நீங்கள் சுமந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆமாம், ‘ஒரு டாய்லெட்டில் இருப்பதைவிட அதிக அளவு கிருமிகள் பெண்களின் ஹேண்ட்பேக்கில் இருக்கின்றன’ என நிரூபித்திருக்கிறது ஒரு ஆராய்ச்சி. […]
சலித்துக் கொள்பவர்கள், ஒவ்வொரு வாய்ப்பிலும் இருக்கிற ஆபத்துகள் என்னவென்று பார்க்கிறார்கள். சாதிக்க நினைப்பவர்கள், ஒவ்வொரு ஆபத்திலும் வெற்றிக்கான வாய்ப்பைத் தேடுகிறார்கள்.
நம்பிக்கைவாதி ரோஜாவைப் பார்க்கிறான்; முட்களை அல்ல. அவநம்பிக்கையாளன் முட்களைப் பார்க்கிறான்; ரோஜாவை அல்ல!
காந்தியின் இளம் வயது நண்பர் ஒருவர், சுருட்டு பிடிக்கும் வழக்கமுடையவர். அவருடன் சேர்ந்ததால் காந்திக்கும் இந்தக் கொடிய பழக்கம் தொற்றிக்கொண்டது. பிரிட்டிஷ்காரர்களைப் பார்த்து, ‘சுருட்டு பிடிப்பதே நாகரிகம்’ என்ற நினைப்பு அப்போது இந்தியாவில் வசித்த மேல்தட்டு மக்களுக்கு இருந்தது. காந்தியும் தன்னை நாகரிக இளைஞனாக காட்டிக் கொள்ள முயன்றார். கூடவே அசைவ உணவும் பழகினார்.இதனால் காந்தியின் செலவுக்கு நிறைய பணம் தேவைப்பட்டது. கடைகளிலும் நண்பர்களிடமும் கடன் வாங்கினார். கடனை அடைப்பதற்குப் பணம் தேவைப்பட்டதும் என்ன செய்வது என்று […]