அம்புப் படுக்கையில் இருந்தபடி கிட்டத்தட்ட ஒரு மாத காலம் தர்மருக்கும் பாண்டவர்களுக்கும் பல உபதேசங்களைச் சொன்னார் பிதாமகர் பீஷ்மர். அதில் ‘ராஜ நீதி’ என அவர் சொல்லியிருக்கும் பல விஷயங்கள், வாழ்க்கையில் வெற்றியை அடையத் துடிக்கும் பலருக்கும் நிர்வாகக் கலை மந்திரங்களாக இருக்கும். * எப்போதும் முயற்சியுடன் இருக்க வேண்டும். முயற்சி இல்லாதவனுக்குத் தெய்வத்தின் உதவி கிடைக்காது. வண்டிக்கு இரு சக்கரங்களைப் போல வாழ்க்கைக்கு இவ்விரண்டும் தேவை. இவ்விரண்டில் முயற்சியே மேலானது. ஒருவேளை உன் முயற்சி வீணாய் […]
உலகில் மற்ற எல்லா விஷயங்களையும்விட, அச்சமே நிறைய பேரைத் தோற்கடிக்கிறது.
தவறுகளிலிருந்துதான் புதிய விஷயங்களை மனித இனம் கற்றுக் கொள்கிறது. ஆனால் எல்லா தவறுகளையும் ஒரே மாதிரி பார்க்கும் குணம் நம்மில் பலருக்கு இருக்கிறது. ‘‘சில தவறுகளைச் செய்யப் பயப்படத் தேவையில்லை. அவைதான் நம்மை பண்பட்டவர்களாக செதுக்குகின்றன’’ என்கிறார்கள் வாழ்க்கை நலக் கல்வி தரும் நிபுணர்கள். அவை... தப்பானவரிடம் காட்டும் அன்பு: நம் நேசத்தை எல்லாம் கொட்டி உருவாக்கும் ஒரு உறவு தப்பானது என்றால் இதயமே நொறுங்கிப் போய் விடும். ஆறாத் துயரத்தில் கண்ணீர் பெருக்கெடுக்கும். மாதங்கள், வருடங்கள் […]
1. கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முடியாது என்று காந்தியடிகளும், சுதந்திரப் போராட்ட வீரர்களும் நினைத்திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. சி.சுப்பிரமணியமும், எம்.எஸ்.சுவாமிநாதனும் முடியாது என்று நினைத்திருந்தால், இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருக்காது. வர்கீஸ் குரியன் முடியாது என்று நினைத்திருந்தால், இந்தியா பால்வளத்தில் தன்னிறைவு அடைந்து இருக்காது. விக்ரம் சாராபாய் முடியாது என்று நினைத்திருந்தால் இன்று செயற்கைக்கோளை இந்தியா ஏவியிருக்க முடியாது. ‘முடியாது’ என்ற நோய் பல […]
காந்தி ஒற்றை வார்த்தை சொன்னாலும், அதை மந்திரமாக ஏற்று மக்கள் பின்பற்றினார்கள். தன் பேச்சால் இந்தியாவையே கட்டிப் போட்ட காந்தி, இளம் வயதில் கூச்ச சுபாவத்துடன் பேசவே தயங்கும் இளைஞராக இருந்தார் என்பது ஆச்சரியம்.லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்து அவர் அட்டர்னி ஆனார். முதல் வழக்குக்காக நீதிமன்றத்தில் வாதாடும்போது, அவர் கால்கள் நடுங்கின. நாக்கு குழறியது. என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பிய அவர், அப்படியே கீழே உட்கார்ந்துவிட்டார். ஆனால் தென் ஆப்ரிக்கா சென்றபிறகு அவர் வெற்றிகரமான வழக்கறிஞராக […]
நூற்றுக்கணக்கான மேடைகளில், ஆயிரக்கணக்கான மக்களையும் மாணவர்களையும் சந்தித்து, லட்சக்கணக்கான இளைய தலைமுறையினருக்கு உந்துசக்தியாக இருந்து, கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயங்களில் வாழும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் ஒவ்வொரு உரையும் தன்னம்பிக்கை உரம் தரும். அவரது தாய்மண்ணில் அமைந்த முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் ‘நீ நீயாக இரு’ என்ற தலைப்பில் அவர் நிகழ்த்திய உரையின் சில பகுதிகள்: ‘‘தினமும் வீட்டில் எரியும் மின்சார பல்பை பார்த்தவுடன் நம் நினைவுக்கு யார் வருகிறார்? தாமஸ் ஆல்வா எடிசன். […]
சேமிக்க வேண்டிய நேரத்தில் செலவு செய்யாதீர்கள். செலவு செய்ய வேண்டிய நேரத்தில் சிக்கனம் செய்யாதீர்கள்.
சில நேரங்களில், நாம் பொழுது போக்க முடியாமல் விளையாட்டாகச் செய்கின்ற விஷயங்களுக்கு அடிமையாகி விடுகிறோம். உதாரணமாக, பேருந்துகளில் செல்லும்போது, ஓய்வாக அமர்ந்திருக்கும்போது, நம்முடைய அலைபேசியில் விளையாடுவோம். நாளாக நாளாக அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறோம். தொடர்ந்து அலைபேசியில் விளையாடிக் கொண்டே இருப்பது, வேலைக்கு இடை இடையே விளையாடுவது, யாருடனாவது பேசிக் கொண்டிருக்கும்போது அவர்கள் முகம் பார்த்துப் பேசாமல் அலைபேசியில் விளையாடிக் கொண்டே பேசுவது, இன்னும் ஒரு படி மேலே போய் காலை எழுந்தது தொடங்கி இரவு தூங்கும் […]
எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.
குழந்தையை ஆரோக்கியமாக வளர்ப்பதில் மட்டுமின்றி, அவர்களை அறிவாளியாக செதுக்குவதிலும் உணவுக்கு பெரும் பங்கு உண்டு. வளரும் குழந்தைக்கும் சரிவிகித ஊட்டச்சத்துகள் அடங்கிய உணவு தருவது அவசியம். அப்படிப்பட்ட சூப்பர் உணவுகள் சில: ஓட்ஸ்: காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடும் குழந்தைகள், பள்ளியில் பாடங்களை ஊன்றி கவனிக்க முடிவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நார்ச்சத்து நிரம்பிய முழு தானியமான ஓட்ஸ், சிறிது சிறிதாகவே ஜீரணமாகிறது. எனவே சீரான சக்தியை நீண்ட நேரம் குழந்தைக்கு வழங்குகிறது. லவங்கப்பட்டை தூள்: காலையில் குழந்தைக்குத் […]