நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்குத் தகுதியானது கண்டிப்பாகக் கிடைத்தே தீரும்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஒரு மாணவி பேருந்தில் சென்று கொண்டிருந்தாள். பயண நேரத்தை வீணாக்காமல் தன் இருக்கையில் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்தாள். திடீரென்று புத்தகத்தில் இருந்து கண்களை எடுத்துப் பார்த்தவள், அடுத்த நிறுத்தம் அழகிய பாண்டியபுரம் என்று தெரிந்து கொண்டாள். பின்னால் ஒரு பாட்டி கண்டக்டரிடம், ‘‘அழகிய பாண்டியபுரம் வந்தா சொல்லுப்பா’’ என்று கேட்டது போல் இருந்தது. பஸ் நிறுத்தம் வந்தது. எல்லோரும் இறங்கியபின் கண்டக்டர் மறுபடி விசில் ஊதப் போகும்போது மாணவி எழுந்து, ‘‘இருங்க... […]
நம்முடன் வாழ்பவர்களைப் புரிந்துகொள்வதற்கு, முதலில் நம்மைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு கல்லூரி மாணவன் காலையில் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான். அப்போது படுக்கையின் ஓரத்தில் அவன் காலடியில் அன்றைய தினசரி செய்தித்தாளை யாரோ வைத்து விட்டுப் போயிருந்தார்கள். சிறிது நேரத்தில் அவன் எழுந்து, காலருகே இருந்த செய்தித்தாளை எடுத்து தரையில் தூரமாக வைத்து விட்டு மறுபடியும் தூங்கிப்போனான். மறுநாளும் அப்படியே செய்தித்தாள் வந்து அவன் தூக்கத்தைக் கெடுத்தது. யாரோ தற்செயலாக வைத்திருக்கிறார்கள் என்று விட்டு விட்டான். ஆனால் மூன்றாவது நாளும் அப்படியே செய்தித்தாள் கிடந்தது. ஒரு வாரம் இது […]
அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது; அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது; அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.
எழுபது வயதை நெருங்கும் அப்பாவும், அவரது 35 வயது மகனும் தோட்டத்தில் அமர்ந்திருந்தார்கள். தென்னையில் தொங்கும் இளநீர், காய்த்துக் குலுங்கும் மாமரம் என்று அப்பா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க… செல்போனில் பேசியபடியே, தனது லேப்டாப்பில் பிஸியாக ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தார் மகன்.அப்போது ஒரு புறா பறந்து வந்து மாமரத்தில் உட்கார்ந்தது. மகன் செல்போனில் பேசி முடிக்கும்வரை பொறுமையாக இருந்த அப்பா, ‘‘அது என்னதுப்பா?’’ என்று கேட்டார். தன் வேலையில் மும்முரமாக இருந்த பையன், நிமிர்ந்து பார்த்து […]
ஓர் எறும்புத்தின்னி காட்டில் உலவிக் கொண்டிருந்தது. வழியில் ஒரு கரடியைப் பார்த்தது. கரடி அந்த எறும்புத்தின்னியைப் பார்த்து, ‘‘எனக்கொரு உதவி செய்’’ என்றது. ‘‘என்ன?’’ ‘‘என்னிடம் பெரிய கொட்டை ஒன்று இருக்கிறது. அதை உடைத்துத் தின்ன முடியவில்லை. உடைத்துத் தருவாயா?’’ ‘‘சரி.’’ கரடி எறும்புத்தின்னியை தன் இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்றது. அது பெரிய கொட்டை அல்ல. அது ஆமை. கரடியைப் பார்த்து ஆமை தன் ஓட்டுக்குள் சுருக்கிக் கொண்டது. அதை கரடி ஏதோ பழக்கொட்டை என்று நினைத்து […]
உனக்குத் தெரிந்ததை தெரியுமென்று ஒப்புக்கொண்டு, தெரியாததை தெரியாது என்று உணர்தலே தன்னம்பிக்கை ஆகும்.
ஒரு கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஒன்றுகூடி, ஒரு படகுப் போட்டி அணியை உருவாக்கினர். அவர்களுக்கு பயிற்சியாளர்கள் என்று யாருமில்லை. டி.வியில் எப்போதாவது காட்டப்படும் படகுப்போட்டிகளை பார்த்ததோடு சரி! இயல்பாகவே அவர்களது தொழிலாக படகு ஓட்டுதல் இருந்தது. கடலிலிருந்து அவர்களது கிராமத்தின் வழியே நிலங்களை ஊடுருவிச் செல்லும் ஒரு உப்பங்கழியில் படகில் சென்று மீன் பிடிப்பது அவர்களது தினசரிக் கடமை. மாலை வரை மீன் பிடித்துவிட்டு, அதன்பிறகு அதே உப்பங்கழியில் வேகமாக படகு ஓட்டிப் பயிற்சி எடுப்பார்கள்.இப்படி […]
தொழிலதிபர் ஒருவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். அவர் அலுவலகத்தில் வேலைக்குச் சேரும் இளைஞர்கள், மிகப்பெரிய லட்சிய ஆசைகள் எதுவுமில்லாமல் ஏனோதானோ என்று வேலை பார்த்தார்கள். வேலையை முழுமையாகக் கற்றுக் கொள்ளாமல் அன்று அன்று கொடுப்பட்ட வேலைகளை மட்டும் செய்தார்கள். இவர்களை எப்படித் திருத்தலாம் என்று தொழிலதிபர் யோசித்து திணறிக் கொண்டிருக்கும்போது ரோட்டில் ஓர் இளைஞன் தஞ்சாவூர் பொம்மை விற்றுக் கொண்டிருந்து ஜன்னல் வழியே தெரிந்தது. இவருக்கு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை என்றால் இஷ்டம். ஒரு நபரை […]